Bread of Life Church India

Showing posts with label வேதாகம உண்மைகள். Show all posts
Showing posts with label வேதாகம உண்மைகள். Show all posts

உண்மை வழி

மதங்களை சுமப்பது மனிதனுக்கு என்றுமே சுமைதான். மதங்கள் ஒன்றுக்கும் உதவாது.

உலகின் எந்த மூலையிலும் வாழும் எந்த மனிதனும்  உறவுகளே, அதை எந்த வகையிலும் பிரித்து பார்ப்பது மனிதனின் அறியாமையையே வெளிக்காட்டும்.

மனிதர் தங்கள் அடையாளங்களை பதிவு செய்ய முயல்கிறார்கள்.மனித மனங்களில் இருக்கும் அறியாமை இருளே கடந்த கால அடையாளங்கள்.

வெளிச்சத்தை பதிவு செய்து இருளை விலக்க முயல்கிறவர்களை மதவாதிகள் எதிர்ப்பது ஒன்றும் புதிய வரலாறு அல்லவே.

இஸ்ரேல் புனித பூமியா? எருசலேம் புனித ஸ்தலமா?



     இஸ்ரேல் பயணம் செல்வதும், இயேசு கிறிஸ்து  பிறந்து, ஊழியம் செய்த பகுதிகளையும், சிலுவைப்பாடுகள் பட்ட இடங்களையும் பார்த்து வருவது நல்ல விஷயம்தான். ஆனால் அதை தற்போது “புனித பயணம்’’ என்றும், புனித ஸ்தலம், புனித பூமி என்றும் அழைக்கிறார்கள். இதை வேதாகமத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றால் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.  எந்த அடிப்படையில் இஸ்ரேல் புனித பூமி என்றும், எருசலேம் புண்ணிய ஸ்தலம் என்றும் அழைக்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிய வில்லை. இப்படிப்பட்ட செயல் ஒரு சிலரால் கிறிஸ்தவத்திற்குள் வந்தது கூட, வேறு சில மதத்தை பார்த்துத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.