Bread of Life Church India

உங்களோடு ஒரு நிமிடம்

தேவனுடைய இராஜ்ஜியத்தில் நாம் பங்கு பெறும் படிக்கு  நமக்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி, நம்மை தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு பங்குள்ளவர்களாக மாற்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
     தொடர்ந்து  ``நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளியிடும்படியாக கிருபை கொடுத்து தாங்கி நடத்திவரும் தேவாதி தேவனைத் துதிக்கிறேன்.
    கடந்த மாதத்தில் ஜீவ அப்பம் மாத இதழ்  ஆசீர்வாதமாக இருந்தது என்று அநேகர் தொலைபேசி வழியாக தெரிவித்தார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
    தற்போது அநேக இடங்களுக்கு மாத இதழ் அனுப்பி வைக்கப்படுவதால்,  அநேகர் தொடர்பு கொண்டு, ஜீவ அப்பம் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது, தொடர்ந்து எங்களுக்கும் அனுப்பி தாருங்கள் என்று தங்கள் விலாசத்தை கொடுத்திருக்கிறார்கள்.
    பிரியமானவர்களே, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள் ஏராளம். அவைகளை அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக நாம் செயல்படவேண்டியது அவசியம்.
     இன்னும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது இருப்பதால்,  இதற்கு தேவைகள் அதிகமாகிறது.
    ஒவ்வோரு மாதமும் புத்தகம் வெளியிடுவது சாதாரணமான காரியம் அல்ல, ஒவ்வோரு இதழும் சவாலாகத் தான் வெளியிடப்படுகிறது, தேவனுடைய கிருபையும், தேவனுடைய துணையும் இல்லாமல் இருக்குமானால் கட்டாயமாக இப்புத்தகம் வெளியிட முடியாது எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாவதாக!
    இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் முதல் எல்லாமாதமும். தொடர்ச்சியாக ஜீவ அப்பம் வெளியிட தேவன் கிருபை செய்து வருகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  இதற்கு தேவ பிள்ளைகளாகிய உங்களின் ஜெபமும், நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
    தொடர்ந்து உங்களின் ஜெபமும் ஒத்துழைப்பும் தேவை, கர்த்தரை மட்டுமே சார்ந்து, விசுவாசத்துடன் இந்த ஊழியம் நடை பெற்று வருகிறது. நீங்கள் இந்த ஊழியத்தில் பங்கு எடுத்து செயல் படும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். எல்லா வித நன்மைகளையும் பெற்று நீங்கள் சுகத்துடன் வாழ்வீர்கள்.
    இந்த ஊழியத்துடன் இணைந்து செயல்படும் போது, நீங்களும் ஊழியம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். இந்த ஊழியத்தின் மூலமாகவும், நமது ஜீவ அப்பம் மாத இதழ் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும் போது அந்த ஆசீர்வாதத்தின் பலனை கர்த்தர் உங்கள் கணக்கில் கொண்டு வருவார்.
    புத்தக ஊழியம் ஒரு மிஷனரியாக செயல்படக்கூடியது. எப்படி என்றால் நாம் நேரடியாக சென்று சொல்ல முடியாத இடங்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை இந்த புத்தகத்தின் மூலமாக நாம் எழுதி அனுப்ப முடியும். நாம் போக முடியாத இடங்களுக்கும் வீடுகளுக்கும் இப்புத்தகம் சென்று,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்து,தேவனுடைய வார்த்தையை சொல்லி, இயேசு கிறிஸ்துவை அறிந்திராத அநேகரை இரட்சிப்புக்கு நேராக நடத்துகிறது.
    உலகத்தின் நெருக்கத்தால் சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது சோர்ந்து இருக்கும் தேவ பிள்ளைகளை உற்சாகப் படுத்தி, விசுவாசத்தில் உறுதியாக நிற்க தேவனுடைய வார்த்தையால் பெலப்படுத்துகிறது. நமது ஜீவ அப்பம் மாத இதழ் ஒரு மிஷனரியாக செயல்படுகிறது. எனவே ஜீவ அப்பம் மாத இதழ் என்னும் மிஷனரியை தாங்குங்கள்.
    அன்பானவர்களே இந்த ஊழியத்தில் இதுவரை நீங்கள் பங்கு எடுக்காமல் இருந்தால் உடனடியாக பங்கு எடுக்க முன் வாருங்கள். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவதை நீங்கள் காண்பீர்கள்.
    தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவாதி தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சமாதானத்தினால் நிறைத்து, ஒரு குறைவும் இல்லாமல் நல்ல சுகத்துடனும் பெலத்துடனும், சந்தோஷமாக வாழ கிருபை தருவாராக ஆமேன். 

0 comments:

Post a Comment