Bread of Life Church India

Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

சரியான நட்பு வேண்டும்



ஒரு முறை நான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அந்த வேளையில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்,  பேருந்து வந்ததும் அதில் ஒருவர், வேகமாக பேருந்தில் ஏறப்போக கூட பேசிக்கொண்டிருந்த மனிதர். அவரை பேருந்தில் ஏறவிடாமல் கையை பிடித்து இழுத்தார்.
உடனே அந்த மனிதர். ஏய் கைய விடுடா, இன்றைக்காவது நான் வேலைக்கு போக வேண்டும், மூன்று நாளா லீவு போட்டதால வீட்டல ஒரே சண்ட, விட்டு விடு, என்று சொல்லி கையை உதறி விட்டு பேருந்தில் ஏற முயற்சிக்க, அந்த நபர் சீ கீழ எரங்கு, என்ற படி  படியில் ஏறிய அந்த நபரை வலுக்கட்டாயமாக இழுத்து இறக்கி விட்டார் பேருந்து சென்று விட்டது.
அந்த நபர் எவ்வளவோ கெஞ்சியும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல்  கையை பிடித்து இழுத்துக்கொண்டே பேருந்து நிருத்தத்தை விட்டு நடக்க ஆரம்பிக்க  டேய் இன்னிக்கி நா வரல, வேலைக்கு போறேன்னு வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன். போலன்னா வீட்ல பிரச்சன பெருச ஆயிடும் நா வரல’’ என்று எவ்வளவோ, மன்றாடி கேட்டும் அந்த நபர் விடுவதாக இல்லை. யேய் என்ன  ரொம்ப அலட்டிக்கிற, செலவ நான் பாத்துக்கிறேன், நீ வா’’ என்று பிடித்த பிடியை விடாமல் வலுக்கட்டாயமாக அந்த நபரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே சென்றான்.
யேய், யேய் வேண்டாண்ட தலைவேற வலிக்குது, இன்னைக்கும் அங்க போன நல்லா இருக்காது’’ என்று எவ்வளவோ கெஞ்சியும் அந்த நபர் விடுவதாக இல்லை என்பதை அறிந்து, கடைசியில் வேறு வழி இல்லாமல்  கூடவே போய்விட்டார்.
இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த நான் என்னதான் நடக்கிறது என்பதை கொஞ்சம் யூகித்து விட்டேன். எனக்கு கோபமாக வந்தது ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் வேறு மனதுக்குள்ளாக இருந்தது, இருப்பினும் அமைதியாக நானும் அவர்களை பின் தொடர்ந்தேன். என்னதான் நடக்கிறது பார்த்து விடலாம் என்று. சிறிது தூரம் சென்றதும்.

நான் என்ன யூகித்தேனோ, அது அப்படியே நடந்தது, சிறிது தூரத்தில் இருந்த டாஸ்மாக்’’ கடைக்குள் இருவரும் சென்றனர்.
 வேலைக்கு போகிறேன் என்று சொன்ன நபருக்கு, குடும்பம் இருக்கிறது. அவர் வேலைக்கு போனால்தான் அந்த குடும்பம் நடக்கும், குடிகார கணவனை திட்டி, குடும்ப நிலையை விளக்கி, சாப்பாடு கட்டிக்கொடுத்து, மனைவி வேலைக்கு அனுப்பி இருக்கிறாள் என்பது அந்த நபரின் பேச்சில் இருந்து தெரிந்தது.
ஆனால் அந்த நபரோ, இன்னொருவனால் வலு கட்டாயமாக டாஸ்மாக் கடைக்குள் இழுத்து செல்லப்பட்டு, மறுபடியுமாக குடிக்க  வைக்கப்பட்டு,  அந்த மனைவி, பிள்ளைகளின் எதிர்பார்ப்பை தகர்த்து, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டானே, என்று என் மனம் எரிய ஆரம்பித்தது.
அன்றைக்கு நான் எதுவும் பேசாமல் வந்து விட்டாலும் இன்னும் அந்த நினைவு என்னை விட்டு அகல வில்லை.
இன்றும் இப்படி அநேக இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் என்ன வேண்டாத நபர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதுதான், தவறான நட்பு தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது.
நாம் பழகும் நபர்கள் யார்? அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
குடி என்பது இன்றைக்கு அநேகருக்கு ஜாலி’’ ஆனால் அதினால் அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.
விளையாட்டாய் குடிக்கு அடிமையாகி, அதன் மூலமாக சீரழியும் குடும்பங்கள் எத்தனை எத்தனை. நண்பர்கள் என்ற போர்வையில் குடிக்கு அடிமைப்படுத்தி, சீரழிக்கிறவர்கள் எத்தனை பேர்.
எல்லாவற்றிற்றுகும் கணக்கு பார்க்கும் சில மனிதர்கள் இந்த குடிக்கு மட்டும் கணக்கு பார்க்கிறதே இல்லை.
குடியின் அபாயம் தெரிந்தும் சிலர் அந்த குடிக்கு அடிமையாக இருப்பதுதான் மிகுந்த வேதனை.
அன்றாடம் கூலி வேலை செய்யும் நபரின் குடும்பத்திற்குள் சென்று பார்த்தால் பரிதாபம்.
வேலைக்கு சென்று சம்பளம் வாங்கியதும் நேராக குடிக்கவே செல்கிறான்
தினம் தோரும் ஒழுங்காக வேலைக்கு போய் சம்பளத்தை வீட்டில் கொடுத்தால் அந்த குடுப்பம் ஏழையாக இருக்காது. ஒரு சில நாட்கள் உண்மையில் வேலை இல்லை என்றாலும்,  வீண் செலவு இல்லை என்றால் அழகாக குடும்பத்தை நடத்த முடியும்.
ஆனால் நடப்பது அதுவா. ஒருநாள் வேலைக்கு போனால் வேலை இருந்தாலும் பல நாள் வேலைக்கு செல்வது இல்லை. காலையில் ஆரம்பித்து இரவு வரை போதையிலேயே இருக்கிறான். குடும்பத்தைக் குறித்த அக்கரை இல்லை, பிள்ளைகளை குறித்த அக்கரை இல்லை.  பணக்காரன் முதல் ஏழைவரை, வாலிபன் முதல் கிழவன் வரை, குடி பேஷன் ஆகி விட்டது.
சந்தோஷம் வந்தாலும் குடி, துக்கம் வந்தாலும் குடி, கல்யாண வீட்டிற்கு சென்றாலும் குடி, இழவு வீட்டிற்கு சென்றாலும் குடி, குடி, குடி எங்கும் எதிலும் குடி, ஆபிஸ் பார்ட்டி ஆனாலும் குடி, இருவர் சந்தித்தாலும் குடி,
இந்த குடி என்பது ஒரு பிசாசு என்பது அநேகருக்கு தெரிய வில்லை. இந்த பிசாசின் பிடியில் நாளுக்கு நாள் அநேகர் சிக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த பிசாசு மனிதருக்குள்ளாக புகுந்து குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.
இந்த பிசாசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனி மனிதனையும் குடும்பங்களையும் விடுவிக்க வேண்டுமானால் ஒருவர் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக மனந்திரும்பி வர வேண்டும்.
எந்த நிலையிலும் குடி என்ற பிசாசை அருகில் வரவிடாதபடிக்கு விரட்டி அடிக்க வேண்டுமானால் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை உண்மையாக பின்பற்ற வேண்டும்.
குடி என்ற பிசாசின் பிடியில் இருந்து விடுபட வேண்டுமானால் சுய முயற்சி உதவாது இயேசு கிறிஸ்துவே விடுதலை தருகிறார்.








சுவரில் அடித்த பந்து

 
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு போதகர் தன்னுடைய திருச்சபை மக்களோடு இணைந்து நற்செய்தி அறிவிப்பதற்காக அருகில் இருந்த  கிராமத்திற்கு சென்றனர். இயேசு கிறிஸ்துவைக் குறித்த செய்திகள் அடங்கிய துண்டு பிரதிகளை கொடுத்து இயேசு உங்களை நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த செயல் நல்லதா ?

சில நண்பர்கள் தங்கள் முக நூல் பக்கத்தில் தொடர்ந்து ஊழியங்களையும், ஊழியர்களையும் விமர்சனங்கள் செய்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் தவறு செய்கிறவர்களை அடையாளம் காட்டுகிறோம் என்று பதில் சொல்லுவார்கள்.

எச்சில் கைகள்




ஊழியங்களிலும், ஊழிய அழைப்பிலும், வித்தியாசங்கள் உண்டு. வேதாகமத்தில் அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அழைப்பின்படி ஊழியத்தை நிறைவேற்றினர். அதில் அவர் ஊழியம் சிறந்தது, இவர் ஊழியம் குறைந்தது என்று எதையும் சொல்ல முடியாது.
இந்த காலத்திலும் அவரவர் அழைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் நிலைத்திருப்பது நல்லது. நிறை குறை எல்லோரிடத்திலும் உண்டு. குறைகளை மட்டும் நோக்கினால் ஒருவர் கூட தேறமாட்டோம் . இது தான் உண்மை.
இப்போதும் சிலர் சொல்லுவதை கேட்டிருக்கிறேன். நான் பவுலைப்போல ஊழியம் செய்கிறேன். நான் அவரைப்போல ஊழியம் செய்கிறேன், நான் இவரைப்போல ஊழியம் செய்கிறேன் என்று சொல்லி விட்டு, அப்படிப்பட்டவர்களின் ஊழிய வழிகளை நோக்கி பார்ப்பது இல்லை.

இந்த நிலைமை வேண்டாமே


இரவு நன்றாக தூங்கி, காலை எழும்பினேன். எழுந்தது முதல் உள்ளத்தில் நின்ற நினைவுகள் வேறு எதையும் சிந்திக்க விடாமல் அந்த நினைவுகளிலேயே உள்ளம் நிறைந்திருந்தது.  அதிலிருந்து விடுபடமுடியாமல் அதையே சுற்றிக்கொண்டிருக்கிறது உள்மனம்.

உங்களோடு ஒரு நிமிடம்

தேவனுடைய இராஜ்ஜியத்தில் நாம் பங்கு பெறும் படிக்கு  நமக்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி, நம்மை தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு பங்குள்ளவர்களாக மாற்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
     தொடர்ந்து  ``நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளியிடும்படியாக கிருபை கொடுத்து தாங்கி நடத்திவரும் தேவாதி தேவனைத் துதிக்கிறேன்.
    கடந்த மாதத்தில் ஜீவ அப்பம் மாத இதழ்  ஆசீர்வாதமாக இருந்தது என்று அநேகர் தொலைபேசி வழியாக தெரிவித்தார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
    தற்போது அநேக இடங்களுக்கு மாத இதழ் அனுப்பி வைக்கப்படுவதால்,  அநேகர் தொடர்பு கொண்டு, ஜீவ அப்பம் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது, தொடர்ந்து எங்களுக்கும் அனுப்பி தாருங்கள் என்று தங்கள் விலாசத்தை கொடுத்திருக்கிறார்கள்.
    பிரியமானவர்களே, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள் ஏராளம். அவைகளை அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக நாம் செயல்படவேண்டியது அவசியம்.
     இன்னும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது இருப்பதால்,  இதற்கு தேவைகள் அதிகமாகிறது.
    ஒவ்வோரு மாதமும் புத்தகம் வெளியிடுவது சாதாரணமான காரியம் அல்ல, ஒவ்வோரு இதழும் சவாலாகத் தான் வெளியிடப்படுகிறது, தேவனுடைய கிருபையும், தேவனுடைய துணையும் இல்லாமல் இருக்குமானால் கட்டாயமாக இப்புத்தகம் வெளியிட முடியாது எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாவதாக!
    இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் முதல் எல்லாமாதமும். தொடர்ச்சியாக ஜீவ அப்பம் வெளியிட தேவன் கிருபை செய்து வருகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  இதற்கு தேவ பிள்ளைகளாகிய உங்களின் ஜெபமும், நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
    தொடர்ந்து உங்களின் ஜெபமும் ஒத்துழைப்பும் தேவை, கர்த்தரை மட்டுமே சார்ந்து, விசுவாசத்துடன் இந்த ஊழியம் நடை பெற்று வருகிறது. நீங்கள் இந்த ஊழியத்தில் பங்கு எடுத்து செயல் படும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். எல்லா வித நன்மைகளையும் பெற்று நீங்கள் சுகத்துடன் வாழ்வீர்கள்.
    இந்த ஊழியத்துடன் இணைந்து செயல்படும் போது, நீங்களும் ஊழியம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். இந்த ஊழியத்தின் மூலமாகவும், நமது ஜீவ அப்பம் மாத இதழ் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும் போது அந்த ஆசீர்வாதத்தின் பலனை கர்த்தர் உங்கள் கணக்கில் கொண்டு வருவார்.
    புத்தக ஊழியம் ஒரு மிஷனரியாக செயல்படக்கூடியது. எப்படி என்றால் நாம் நேரடியாக சென்று சொல்ல முடியாத இடங்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை இந்த புத்தகத்தின் மூலமாக நாம் எழுதி அனுப்ப முடியும். நாம் போக முடியாத இடங்களுக்கும் வீடுகளுக்கும் இப்புத்தகம் சென்று,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்து,தேவனுடைய வார்த்தையை சொல்லி, இயேசு கிறிஸ்துவை அறிந்திராத அநேகரை இரட்சிப்புக்கு நேராக நடத்துகிறது.
    உலகத்தின் நெருக்கத்தால் சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது சோர்ந்து இருக்கும் தேவ பிள்ளைகளை உற்சாகப் படுத்தி, விசுவாசத்தில் உறுதியாக நிற்க தேவனுடைய வார்த்தையால் பெலப்படுத்துகிறது. நமது ஜீவ அப்பம் மாத இதழ் ஒரு மிஷனரியாக செயல்படுகிறது. எனவே ஜீவ அப்பம் மாத இதழ் என்னும் மிஷனரியை தாங்குங்கள்.
    அன்பானவர்களே இந்த ஊழியத்தில் இதுவரை நீங்கள் பங்கு எடுக்காமல் இருந்தால் உடனடியாக பங்கு எடுக்க முன் வாருங்கள். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவதை நீங்கள் காண்பீர்கள்.
    தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவாதி தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சமாதானத்தினால் நிறைத்து, ஒரு குறைவும் இல்லாமல் நல்ல சுகத்துடனும் பெலத்துடனும், சந்தோஷமாக வாழ கிருபை தருவாராக ஆமேன். 

ஜீவ அப்பம் ஊழியங்களின் செயல்பாடுகள்

”ஜீவ அப்பம் ஊழியங்கள்” வட சென்னை பகுதியிலே திருவொற்றியூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தனி மனிதனும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அவரை பின்பற்றும் சீஷர்களாக, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தேவன் கொடுத்த ஆத்தும பாரத்தோடு செயல்பட ஆரம்பித்தோம்.
சிறு ஜெப குழுவாக ஆரம்பிக்கப்பட்ட ஊழியம். பிறகு கைப்பிரதி அச்சிட்டு விநியோகித்து தனி மனித சுவிசேஷ பணியிலே செயல் பட்டோம்.அதன்பின் நாம சந்திக்காத நபர்களையும் பத்திரிக்கை சந்தித்து சுவிசேஷத்தை அறிவிக்கும் என்று கர்த்தருக்குள் நாங்கள் ஜெபித்து தீர்மானிக்க கர்த்தர் உதவி செய்த படியினாலே புத்தகம் வழியாக ”ஜீவ அப்பம்”மாதாந்திர பத்திரிக்கை வழியாக சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் வாசலை திறந்தார்.
திரளான ஜனங்கள் கூடி சுவிசேஷத்தை கேட்பதற்கு இசைவாக பொது இடங்களில் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார். வேதத்தை ஓவ்வொருவரும் கிரமமாக கற்று தேவனுக்கு சாட்சியாய் வாழ ”வேத பாடக் கூட்டங்கள்” நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார்.
சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், சபை இல்லாத இடங்களில் சபை ஸ்தாபிக்கவும் தேவன் தரிசனம் தந்துள்ளார்.
ஜீவ அப்பம் ஊழியங்களின் முதல் திருச்சபையாக திருவொற்றியூர், அம்பேத்கார் நகரில் "ஜீவ அப்பம் திருச்சபை'' துவங்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
திரித்துவ  உபதேச அடிப்படையில், பெந்தெகொஸ்தே  அனுபவத்தில் ஆராதனைகளும், ஊழிய செயல்பாடுகளுடன்,
கர்த்தரை மட்டுமே புகலிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம.
புதிய தலைமுறையினர் கிறிஸ்துவை விசுவாசிக்கவும், கிறிஸ்துவில் வளரவும் வேண்டும். நமது தலைமுறை சத்தியத்திலும், மெய்யான நீதியிலும், தன்னை நேசிப்பதைப் போல பிறரை நேசித்து அன்பு கூரவும் வேண்டும் என்ற இயேசு கிறிஸ்துவின் பாரத்தோடு தேவ கிருபையினால் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.இதே எண்ணத்தோடும் பாரத்தோடும் நீங்களும் இருப்பீர்கள் என்றால் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.