Bread of Life Church India

உயிர்தெழுந்த நாள் கொண்டாடப்படுவது இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே


உலகம் உண்டான நாள் முதல் இதுவரை எத்தனையோ கோடி மக்கள் பிறந்தும், மரித்தும் இருக்கிறார்கள், எத்தனையோ தலைமுறை வந்து சென்றிருக்கிறது. ஆனால் இதுவரை உலக சரித்திரத்தில் மனிதர்கள் பிறந்த நாள் கொண்டாடி கேள்விப்படுகிறோம். இறந்த நாளை நினைவு நாளாக அநுசரிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த மனிதனுக்கும் உயிரோடு எழும்பின நாளை கொண்டாடியது இல்லை.

மரணத்துக்கு மரணம் !

 

மரிக்கும்படியாக முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட வில்லை. எப்பொழுது ஆதாமும், ஏவாளும் தேவனுடைய வார்த்தையை மீறி செயல்பட ஆரம்பித்தார்களோ, அந்நேரம் முதல் மரணம் மனிதனுக்குள்ளாக பிரவேசிக்க ஆரம்பித்தது.
    மரணம் என்பது, தண்டனைதான், ``தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி; நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
    ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் <ஆதி 2:16,17>.
    ``சாகவே சாவாய்'' என்னும் பதம், இரண்டு அர்த்தங்களை குறிக்கின்றவையாக இருக்கிறது.

நான் உனக்குத் துணை நிற்கிறேன்


``உன் தேவனா யிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து; பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்'' <ஏசாயா 41:13>.
    பிரியமானவர்களே, எனக்கு துணையாக யாரும் இல்லையே, எல்லாம் எனக்கு எதிராகவே இருக்கிறதே என்று, மனம் கலங்கி வேதனையோடு இருக்கும் உங்களைப் பார்த்துதான் கர்த்தர் சொல்லுகிறார் ``நான் உனக்குத் துணை நிற்கிறேன்'' இந்த உலகத்திலே, யாருக்கு செல்வாக்கும், உயர்ந்த பதவியும், அதிகாரமும்  இருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களின் பின்னால்தான் ஒரு கூட்டம் எப்போதும் துணையாக இருந்து கொண்டே இருக்கும்.

விலைமகள் விசுவாசியாகிறாள்.

யோவான் 8:11 வேதபகுதி மிகவும் கடினமான பகுதியாக இருந்தாலும், இயேசுகிறிஸ்துவானவர் இந்த பூமிக்கு வந்ததை உலகிற்கு உரக்க சொல்லும் செய்தியாகும்.மனிதனின் சட்டங்களுக்கும் தேவனின் சட்டங்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஜீவ அப்பம் ஊழியங்களின் செயல்பாடுகள்

”ஜீவ அப்பம் ஊழியங்கள்” வட சென்னை பகுதியிலே திருவொற்றியூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தனி மனிதனும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அவரை பின்பற்றும் சீஷர்களாக, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தேவன் கொடுத்த ஆத்தும பாரத்தோடு செயல்பட ஆரம்பித்தோம்.
சிறு ஜெப குழுவாக ஆரம்பிக்கப்பட்ட ஊழியம். பிறகு கைப்பிரதி அச்சிட்டு விநியோகித்து தனி மனித சுவிசேஷ பணியிலே செயல் பட்டோம்.அதன்பின் நாம சந்திக்காத நபர்களையும் பத்திரிக்கை சந்தித்து சுவிசேஷத்தை அறிவிக்கும் என்று கர்த்தருக்குள் நாங்கள் ஜெபித்து தீர்மானிக்க கர்த்தர் உதவி செய்த படியினாலே புத்தகம் வழியாக ”ஜீவ அப்பம்”மாதாந்திர பத்திரிக்கை வழியாக சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் வாசலை திறந்தார்.
திரளான ஜனங்கள் கூடி சுவிசேஷத்தை கேட்பதற்கு இசைவாக பொது இடங்களில் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார். வேதத்தை ஓவ்வொருவரும் கிரமமாக கற்று தேவனுக்கு சாட்சியாய் வாழ ”வேத பாடக் கூட்டங்கள்” நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார்.
சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், சபை இல்லாத இடங்களில் சபை ஸ்தாபிக்கவும் தேவன் தரிசனம் தந்துள்ளார்.
ஜீவ அப்பம் ஊழியங்களின் முதல் திருச்சபையாக திருவொற்றியூர், அம்பேத்கார் நகரில் "ஜீவ அப்பம் திருச்சபை'' துவங்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
திரித்துவ  உபதேச அடிப்படையில், பெந்தெகொஸ்தே  அனுபவத்தில் ஆராதனைகளும், ஊழிய செயல்பாடுகளுடன்,
கர்த்தரை மட்டுமே புகலிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம.
புதிய தலைமுறையினர் கிறிஸ்துவை விசுவாசிக்கவும், கிறிஸ்துவில் வளரவும் வேண்டும். நமது தலைமுறை சத்தியத்திலும், மெய்யான நீதியிலும், தன்னை நேசிப்பதைப் போல பிறரை நேசித்து அன்பு கூரவும் வேண்டும் என்ற இயேசு கிறிஸ்துவின் பாரத்தோடு தேவ கிருபையினால் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.இதே எண்ணத்தோடும் பாரத்தோடும் நீங்களும் இருப்பீர்கள் என்றால் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

இதையும் கொஞ்சம் படிங்க





 
வாழ்க்கையின் தார்ப்பரியம், சந்தோஷமும், மகிழ்ச்சியும், சமாதானமுமே, ஆனால் இப்படிப்பட்ட வாழ்க்கையை எத்தனை பேர் உண்மையாக வாழ்கிறார்கள்?

    இவைகளெல்லாம் நமக்கில்லையோ! ஒரு சிலருக்குத்தான் செழிப்பான வாழ்க்கையும், சமாதானமும், சந்தோஷமும் நிரந்தரமோ? நம்முடைய தலைவிதி இவ்வளவுதானா? அல்லது நம்முடைய வாழ்க்கையும், செழிப்படைய வாய்ப்புள்ளதா? அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்.
    இப்படிப்போல பல கேள்விகள், ஒருநாள் அல்ல, சில நாள் அல்ல, வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், இதைக்குறித்த சிந்தையோடு வாழ்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி : உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த  எல்லா துன்பமும், வேதனைகளும், பயமும், வியாதியும் நீங்கி, உங்கள் வாழ்வில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுத்து உங்களை நல்ல முறையில் வாழவைக்க இயேசு கிறிஸ்து விரும்புகிறார். அதற்காகவே இந்த செய்தியின் வழியாக உங்களை அழைக்கிறார்

நினைவுநாள் ஸ்தோத்திர கூட்டம் அவசியமா?






மரித்து போன ஒருவருக்கு நினைவு நாள் கொண்டாடுவது, சில மதங்களில் இருக்கும் பாரம்பரியங்கள், இதற்கு பல காரணங்களை முன்னோர்களின் பெயரை சொல்லி அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இது மெல்ல மெல்ல கிறிஸ்தவத்திலும் உட்புக ஆரம்பித்து, 16ம் நாள், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு என்று,  அதற்கும் ஜெப கூட்டங்கள் நடத்தப்பட ஆரம்பித்தது.
ஆனால் பெந்தெகொஸ்தே சபைகள், சுயாதீன சபைகளில் இதற்கு எதிர்ப்புகள் எழும்பின, ஆகையால் சில சபைகளில் மட்டும் மரித்தவர்களுக்கு ஜெப கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை.

சரியான முறைமைகள் தானா?


இக்கால ஆராதனை முறைமைகள் எதைபார்த்து செய்யப்படுகிறது, இதற்கு முன்மாதிரி யார்? பரவசபட வைக்க வேண்டும், வாலிபர்கள் கவர்ந்திழுக்கப்பட வேண்டும் , ஆராதனைகள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று, ஆராதனை விழாக்கள், ஆராதனை பெருவிழாக்கள் பெருகிவருகிறது,

ஆராதனை நடத்தும் ஆராதனை வீரர்கள் கையில் பைபிள் எடுத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, ஆனால் மேடையில் ஏறும் போதே கைக்குட்டையை கையில் எடுத்து கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல ஆராதனைவேளையில் கைக்குட்டையை எடுத்து எல்லோரையும் சுற்றச்சொல்லுவதும்,நல்லா டான்ஸ் ஆட சொல்வதும், தற்கால நவீன முறையாகிவிட்டது, இதைக்கேட்டவுடன் உடனே  வாலிபர்கள், முதியவர்கள் என்று பாகுபடில்லாமல், எல்லோரும் கைக்குட்டையை எடுத்து சுற்றுகிறார்கள், ஆடுகிறார்கள்,

அது மட்டுமல்ல,

கிறிஸ்தவ அடிப்படை உபதேசம் என்பது என்ன?


பாவத்தில் வீழ்ந்த மனித இனத்தை தூக்கி யெடுக்கும் படியாகவும்
, இரட்சித்து மறுரூப படுத்தி, மறுவாழ்வு கொடுக்கும் படியாகவும் இயேசு கிறிஸ்து வானவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு, முன் அறிவிக்கப் பட்டு தேவனாயிருந்த அவர் மனிதனாக பிறந்து,பாடுபட்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தார்.

கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபார உபதேசம் ``மரித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்'' இவ் விசுவாசத்திற்குள் வரும் நபர் இயேசுவின் மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டு,பாவத்திற்கு மரித்து, இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தது போல நீதிக்கு பிழைக்கிறார் இது விசுவாசத்தினாலே உண்டாகும் உயிர்த்தெழுதல்.

சுதந்திரமும் மனித வாழ்வும்


உங்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்.
                சுதந்திரத்தை விரும்ப வேண்டுமானால், அடிமைத்தனத்தை அறிய வேண்டும். தன்னை ஒருவன் தான் விரும்பாமலேயே ஆளுகை செய்கிறான் என்ற எண்ணம். வெகு காலங்களுக்கு பின்பே இந்தியர்களாகிய நமக்கு புரிய ஆரம்பித்தது. அதை நமக்கு புரிய வைத்ததில் பெரும் பங்காற்றியவர்களில் ஒருவர் அன்னிபெசன்ட் அம்மையார். முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவுக்கு வந்திருந்த அன்னிபெசன்ட் அம்மையார் மனதில் மிகுந்த போராட்டம். இந்திய மக்களின் இன்னல்களைப் பார்த்து மனம் வெதும்பினார்.