உயிர்தெழுந்த நாள் கொண்டாடப்படுவது இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே
உலகம் உண்டான நாள் முதல் இதுவரை எத்தனையோ கோடி மக்கள் பிறந்தும், மரித்தும்
இருக்கிறார்கள், எத்தனையோ தலைமுறை வந்து சென்றிருக்கிறது. ஆனால் இதுவரை
உலக சரித்திரத்தில் மனிதர்கள் பிறந்த நாள் கொண்டாடி கேள்விப்படுகிறோம்.
இறந்த நாளை நினைவு நாளாக அநுசரிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த
மனிதனுக்கும் உயிரோடு எழும்பின நாளை கொண்டாடியது இல்லை.
ஆனால் சரித்திரத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உயிரோடு எழுந்த நாள் கொண்டாடப்படுகிறது. அது இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே.
கிறிஸ்தவத்தின் உயிர்நாடியாக இருப்பதும், கிறிஸ்தவத்தின் துவக்கமும்,
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில்தான் ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்ல இயேசு
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், மரணத்துக்கு பின்பும் மனிதனுக்கு மறுவழ்வு
உண்டு என்பதை உலகத்துக்கு உணர்த்திக்காண்பிக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அதிசயம், அவருடைய மனிதனாக இருந்த நாட்களில்
அவர் செய்த அற்புதங்கள் ஏராளம், அவருடைய மரணமும் மனிதர்களின்
பாவத்திற்காகவே, அதுபோல் . அவருடைய உயிர்த்தெழுதல் உலகத்திற்கே சவால்
விடுவதாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, உலக
மக்கள் யாவருக்கும் கொடுக்கும் செய்தி என்ன வென்றால், இனம், மொழி, ஜாதி,
தேசம் கடந்து எல்லா மனிதர்களுமே ஒன்றுதான் என்பதையும், இயேசு கிறிஸ்துவை
கடவுளாக ஏற்றுக்கொண்டால், இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தது போல் அவரை
ஏற்றுக்கொள்ளும் நபரும் உயிரோடு தன் மரணத்திற்கு பின்பாக எழுந்திருப்பார்
என்பதே. இது கதையோ கற்பனையோ இல்லை, எப்படி இயேசுவானவர் உயிரோடு எழுந்தது
உண்மையோ , அது போலவே இதுவும் உண்மையே.
0 comments:
Post a Comment