முன்மாதிரி வாழ்க்கை வாழ்வோம்.
முடியாது, தெரியாது என்றும், தான் செய்த தவறுக்குமற்றவரை சுட்டிக்காட்டுவதும் மனித இயல்பு. இதை நாம் நமது ஆதி பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொண்டோம்.அவர்களது வீழ்ச்சியில் தேவன் அவர்களை விசாரித்தபோது, தங்களது தோல்வியை மறைக்க ஒருவர் மற்றொருவரைசுட்டிக் காட்டினர்.இதுபோல நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும்மற்றவரை குறைகூறபிசாசு நம்மைத் தூண்டுவான்.
ஆனால்குறிப்பாய் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒன்றுக்கும் உதவாததுபிறரை குறைகூறுவதுதான்.நொண்டிக் காரணங்கள் சொல்வதை நாம் நிறுத்தாவிட்டால் நமது வாழ்வில் நொட்டியடித்துக்கொண்டுதான் இருப்போம். ஆகவே, தேவன் நம்மிடம்விரும்பும் பரிசுத்த வாழ்வில் நாம் தோல்வியடையும்போது நாம் கூறுகிறகாரணங்கள் வேதத்தின்படி ஏற்புடையவைதானா? சிந்திப்போம்!
ஆனால்குறிப்பாய் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒன்றுக்கும் உதவாததுபிறரை குறைகூறுவதுதான்.நொண்டிக் காரணங்கள் சொல்வதை நாம் நிறுத்தாவிட்டால் நமது வாழ்வில் நொட்டியடித்துக்கொண்டுதான் இருப்போம். ஆகவே, தேவன் நம்மிடம்விரும்பும் பரிசுத்த வாழ்வில் நாம் தோல்வியடையும்போது நாம் கூறுகிறகாரணங்கள் வேதத்தின்படி ஏற்புடையவைதானா? சிந்திப்போம்!
1. பரிசுத்தமாக இருப்பது முடியாதா?
இவ்வித வார்த்தைகள் நம்மை உற்சாகமிழக்கச்செய்வது மட்டுமல்ல தேவனை ஓர் அன்பு தகப்பனாக அல்ல,இரக்கமில்லா கொடியவராக வெளிப்படுத்திவிடும். எந்தவொரு தகப்பனும் பிள்ளையால் செய்யமுடியாத ஒன்றைகட்டாயப்படுத்தி கொடுப்பதில்லை. தங்கள் வாழ்நாளில் பரிசுத்தமாய் வாழ்ந்துகாட்டியவர்களின் வரலாறு சத்தியவேதத்திலும் சரித்திரத்திலும்ஏராளம் உண்டு! அவைகளை கவனிக்க வேண்டும்.போர்க்களத்தில் வீழ்ந்தவர்கள் அல்ல, எதிர்த்துபோராடுகிறவர்களே நமக்கு நல்ல முன்மாதிரி.பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள பாவத்தைவிட்டு விலகிஓடின யோசேப்பு <ஆதி39:12> தன் காலத்தில்இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாக இருந்தநோவா <ஆதி 6:9>. அதேபோல் ``உத்தமனும் சன்மார்க்கனும்தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன்'' என்றுதேவனால் சாட்சி பெற்றயோபு <யோபு 1:8> என்றுதோல்வியடைந்தவர்களையல்ல, பரிசுத்தமாய் வாழ்ந்துமடிந்தோரின் வாழ்க்கையை உற்று கவனிப்பது, நாமும்பரிசுத்தமாய் வாழ முடியுமென்றநம்பிக்கையை நம்மில்வளர்க்கும் கூடுதல் உற்சாகத்தை நமக்குள்ளும் கொடுக்கும்.
2. பரிசுத்தம் கட்டாயமில்லையா?
பரிசுத்தம் நமது விருப்பு வெறுப்பைப் பொறுத்தல்ல;அது நம்மைப் படைத்தவர் நம்மிடம் எதிர்பார்க்கும்அடிப்படையான கடமையென ஒரு பரிசுத்தவான் கூறுகிறார்.பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.<எபி 12:14> என்று தெளிவாய் வேதம் போதிக்கிறது.கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாகபூரணமனிதனாக தமது பிள்ளைகள் யாவரும் வளரவேண்டுமென்பதே தேவசித்தம் <எபே 4:11>, பரிசுத்தமாய்முடிந்தால் வாழலாம் என்பதல்ல, பரிசுத்தமாய்வாழவேண்டுமென்பது தேவனிடமிருந்து வரும்ஆலோசனையும் அல்ல, அது அவருடைய தீர்மானமானகட்டளை <1பேதுரு 1:15> தேவனுடைய பார்வையில் முடியாதுஎன்பவர்கள் அல்ல, முடியுமென்று முழக்கமிடுபவர்களுக்கேகிருபை கொடுத்து தாங்குகிறார்.
3. பரிசுத்தம் சுபாவத்தைப் பொறுத்ததா?
``என்னால் இதுவெல்லாம் முடியாது என் சுபாவம்அப்படி'' என்று சிலர் அடிக்கடி சொல்லுவதை கேட்டிருக்கலாம்.இது முற்றிலும் சரி என்று கூறமுடியாது. தவறு என்றும்சொல்ல முடியாது. ஏனென்றால் நமது சுபாவங்கள்பலதரப்பட்டவை என்பது உண்மைதான்.சிலருக்கு இயற்கையாகவே கனிவான தன்மையுடன்காணப்படுவார்கள். மற்றவர்களோ கடினமுள்ளவர்களாகஇருப்பர். சிலரது முகங்களைக் காணும் பொழுதேபயமுறுத்துவது போல் காணப்படும். இப்படியாகஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் வீரியம்உள்ளவர்களாகவும், குன்றியவர்களாகவும் இருப்பர்.ஆனால் மறுபடி பிறக்கும்போது புதுப்படைப்பாகிறோம் ``பழையவைகள் ஒழிந்து எல்லாம்புதிதாகிறது <2 கொரி 5: 17>. மேலும் அழிவுள்ள வித்தினாலேஅல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும்ஜெநிப்பிக்கப் பட்டிருக்கிறோம் <1 பேதுரு 1:23>.அதாவது கிறிஸ்துவின் வித்து நமக்குள் ஊன்றப்பட்டுபாவ சுபாவத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் திடன் நமக்குள்கொடுக்கப்பட்டிருக்கிறது <1 யோவான 3:9>. இதினால் இனி நமக்குப் பாவம் செய்வதே இயலாமல் போகும் என்பதுபொருளல்ல, மாறாக ஒவ்வொரு பாவத்தையும் மேற்கொள்ளும் வல்லமையை தேவ கிருபை நமக்கு கொடுக்கிறது<ரோமர் 6 : 14>எனவே, வேதம் கூறுகிறபடி நீங்கள் உங்கள்அவயங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்குஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத் திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்து உங்கள்அவயங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் <ரோமர் 6:13>. உங்கள் பழைய சுபாவம் மாறும்.
பரிசுத்தம், வாழ்க்கையை அனுபவிக்கத் தடையா?
வாலிபரையும் சில வயது முதிர்ந்தோரையும் பிசாசுஏமாற்றும் தந்திரமான பொய் ``வாழ்க்கையில் எல்லாம்அனுபவிக்கவே, கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடாதே.பரிசுத்தம் இப்போதல்ல'' என்று கூறி வாழ்வையே பொய்யானதோற்றத்துடன் குற்ற உணர்வுடன், போலி அன்புடன்மாயையாக்கிவிடுவான்.``பரிசுத்த வாழ்வு என்பது மடத்தில் வாழும் வாழ்வல்ல;அது தெய்வீக சட்டங்களுக்கும் சத்தியத்திற்கும் உட்பட்டகிரமான வாழ்வு'' என்கிறார் ஒரு பரிசுத்தவான். மடியில்கனமில்லையெனில், வழியில் பயமில்லை என்பதுஎல்லோருக்கும் தெரிந்திருக்கும் பழமொழி, பாவ பாரத்தினால்,களைத்து போனவர்களையே வருத்தப்பட்டு பாரம்சுமப்பவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் <மத் 11 : 28>என்று இயேசுவானவர் அழைப்பதே கிறிஸ்தவத்தின்பிரதானம்.வாழ்வில் பரிசுத்தமே மட்டற்றமகிழ்ச்சி என்பர்பரிசுத்தமாய் வாழ்வோர். ``பரிசுத்தம் என்றால் பரலோகம் நம்மில் என்று பொருள்'' என்கிறார் ஒரு பரிசுத்தவான்.எனவே, பரிசுத்த வாழ்வுக்குள் அழைக்கப்பட்டிருக்கும் நமக்குள் பரிசுத்தத்தின் மேல் ஒரு தாக்கம் காணப்படுமாகில்உன்னத பரவசத்திற்கு நேராய் நம்மை தேவன் நடத்துவார்என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை.
பரிசுத்தத்தை வாஞ்சிப்போம்
பரிசுத்தமாய் வாழ தீர்மானிக்கும்போது ஏற்படும்சறுக்குதலில் மனம் துவண்டு விடாமல் நீதிமான் ஏழுதரம்விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் <நீதி 24:16>என்னும் வேத வாக்கியத்தை நினைவில் கொண்டு,சோர்ந்திடாமல் முன்னேறுவோம், சோதனையை வென்றவர் நம் முன் செல்கிறார் ``நாம் நம்மில் அன்பு கூறுகிறவராலேமுற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே''<ரோமர் 8 : 37>
0 comments:
Post a Comment