Bread of Life Church India

கொடுத்தலின் ஆசீர்வாதம்

யாரும் சொல்லிக்கொடுக்காமல் தேவனுக்கு முதன்மையானதையும், முக்கியமானதையும் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொடுத்த ஆபேல் தேவனால் சாட்சி பெற்றான்.

வரமாக பெற்ற ஒரே மகனை எந்த கேள்வியும் கேட்காமல் தேவனுக்கு கொடுக்க தயாரான ஆபிரகாம் வானத்து நட்சத்திரங்களை போலவும், கடற்கரை மணலைப்போலவும் சந்ததிகளை பெற்றான்.

கர்த்தர் தான் கர்ப்பத்தை அடைத்து வைத்துள்ளார் என்பதை அறியாமல் தனக்கொரு பிள்ளையை கொடுத்தால் அதை தேவனுக்கே கொடுப்பேன் என்று சொல்லில் மட்டுமல்ல , சொன்னபடி தேவன் கொடுத்த தும் தேவனுக்கே கொடுத்த அன்னாள் மேலும்  ஐந்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டாள்.

தனக்கும் மகனுக்கும் வாழ்வதற்கு உணவில்லை இருப்பதை உண்டு சாகலாம் என்று முடிவெடுத்த நிலையில் தேவ மனிதன் இருப்பதில்  முதலில் எனக்கு கொடு என்று கேட்டதும் இருப்பதையும் தேவனுக்கு கொடுத்த சாறிபாத் விதவை தேசமே பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட போதும், பஞ்ச காலம் முழுவதும் பசி இல்லாமல் பசுமையாக வாழ்ந்து, வியாதி பட்டு இறந்த மகனையும் அற்புதமாக திரும்ப பெற்றுக் கொண்டாள்.

ஐசுவரியவான்கள் எல்லாம் தங்கள் பரிபூரணத்தில் இருந்து கொடுத்த போது, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேவனுக்கு கொடுத்த ஏழை விதவை இயேசு கிறிஸ்துவினால் கூர்ந்து  கவனிக்கப்பட்டு, பாராட்டுப்பெற்றாள்.


கேட்டுப்பார் தேவனின் அன்பு தெரியும்

கொடுத்துப்பார் நீ தேவன் மேல் வைத்துள்ள அன்பு வெளிப்படும்

நீங்கள் கர்த்தருக்காக கொடுத்தவைகள் கணக்கில் உண்டு. மிகுதியாக உங்களுக்கு கொடுத்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

*சாட்சியாக மாற்றுவார்*




எல்லாம் பொதுவில்



பசியால் மிகவும் களைத்து போன நிலையில் இருந்த ஒரு மனிதன், ஒரு திருச்சபையைக் கண்டு, அதற்குள்ளே சென்று அங்கு இருந்த போதகரிடம் “ஐயா மிகுந்த பசியாக இருக்கிறது, சாப்பிடுவதற்கு ஏதாவது தருகிறீர்களா?” என்று கேட்டான்.
அந்த மனிதனின் நிலையை கண்ட போதகர்  உடனடியாக தங்களிடம் இருந்த உணவைக் கொடுத்து அவன் பசியை ஆற்றினார். இரவு வெகு நேரம் சென்று விட்டபடியினால், அந்த மனிதன் “ஐயா நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் இன்று இரவு மட்டும் இங்கு தங்கிக்கொள்கிறேன்” என்று அனுமதி கேட்டான்.

வழிப்போக்கன்



நான் வசிக்கும்படி எனது தந்தை எனக்காக ஒரு வீட்டை கட்டி, அதில் என்னை குடியேற்றினார். எனது வீட்டில் நான் வசித்து வந்த நாட்களில் ஒருநாள் ஒரு நபர் என் வீட்டு கதவை தட்டி, உங்கள் வீட்டில் எனக்கு ஒரு சிறிய அறையை கொடுங்கள், நான் உங்களுக்கு வேண்டிய பணங்களை கொடுக்கிறேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்கு நான் செய்து கொடுப்பேன். எப்பொழுதும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று பணத்தைக் காண்பித்து, ஆசை வார்த்தைகளை பேசியதில் மயங்கி எனது வீட்டில் ஒரு சிறிய அறையை ஒதுக்கி அந்த நபரை தங்க வைத்தேன்.
ஆரம்பத்தில் நான் என் மனதில் நினைக்கிற எந்த காரியமானாலும் அதை எனக்கு உடனே செய்து கொடுத்தான். எனக்கு மிகவும் இன்பமாக இருந்தது. இப்படி தன் பணத்தையும் கொடுத்து, நான் விரும்புகிற எல்லாவற்றையும் எனக்காக ஓடி ஓடி ஒரு வேலைக்காரனைப்போல உதவி செய்து வந்த நபரை பார்த்து பெருமிதம் கொண்டேன்.
நாட்கள் சென்றன. அந்த நபர் எனது வீட்டின் எல்லா அறைகளையும் என் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த ஆரம்பித்தான். நாட்கள் செல்ல செல்ல எனது பேச்சை மதிக்காமல் அவன் தன் இஷ்டம் போல் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்து விட்டான்.

"ஜீவ அப்பம்'' (மார்ச் 2017) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக,  விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.


எல்லோரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( மார்ச்   2017) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

எந்த சரீரத்தில் இருப்பார்கள்?

“ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்” ( ஆதி 5:24). வேதாகமத்தில் முதன் முதலாக மரணத்தைக் காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்ட மனிதன் “ஏனோக்”.
இதை அடுத்து பழைய ஏற்பாடு காலங்களில் “இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்”  (2 இராஜா 2:11) என்று எலியாவைக்குறித்தும் வேதம் கூறுகிறது.

உள்ளத்திலிருந்து உங்களுடன்



கிறிஸ்துவுக்குள் இனிமையான ஜீவ அப்பம் வாசகர்களே, சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
மறுபடியும் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரில் உங்களில் சிலரை காண முடியாவிட்டாலும், தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிகுந்த சந்தோஷப்படுகிறேன்.
நம்முடைய தலைமுறையில் தேவன் நமக்கு கொடுத்த பொறுப்புக்களை சரியாக உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஜீவ அப்பம், இந்த தலைமுறையில் அநேகர் கிறிஸ்துவுக்குள் வளர்ந்து பெருகவும், கிறிஸ்துவுக்குள்  கட்டப்படவும் செயல்பட்டு வருகிறது.

ஆசீர்வாதமான குடும்பம்

               
“இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக ” (2 சாமுவேல் 7:29).
                தேவனுடைய சமூகத்தில் நிற்கும் பாக்கியம் கிடைக்கப் பெருவதே ஆசீர்வாதம். ஆசீர்வாதங்களிலேயே மிகப்பெரிய ஆசீர்வாதம் தேவனுக்கு முன்பாக இருப்பதுதான். எனவேதான் தாவீது தன்னுடைய வீடு தேவனுக்கு முன்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார்.
தேவனுக்கு முன்பாக இருப்பவர்கள் தான் தங்கள் சுயத்திற்கு தினமும் மரித்து, தேவனுடைய அங்கீகாரத்திற்கு பாத்திராக ஒவ்வொரு நாளும் தகுதியாக முடியும்.
தேவனுக்கு முன்பாக இருக்கும் போது மட்டுமே ஒருவனுடைய சுயமும், அவன் செய்கிற தவறும் நன்றாக வெளிப்படும், தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் தேவனுக்குப் பயந்து தேவனால் நடத்தப்படுகிறவர்களாகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் தேவனுடைய ஆசீர்வாதம் நிறைவாக இருக்கும்.
ஆகையால் தான் கர்த்தாவே, எனது குடும்பம் உமக்கு முன்பாக இருக்க வேண்டுமே என்று தாவீது ஜெபிக்கிறார்.
அநேகர் தனது குடும்பம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் ஆசீர்வாதம் என்றால் என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.
அதைச் சரியாக அறிந்து கொண்டால் உண்மையான ஆசீர்வாதங்களை ஒவ்வொரு குடும்பங்களும் நிறைவாகப் பெற்றுக்கொள்ளும்.

பெரியவர் நம்மோடு


இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் மூன்று சம்பவங்களை மேற்கோள் காட்டி, வேதபாரகர்களையும்,  பரிசேயர்களையும் கடிந்து கொள்வதை மத்தேயு 12ம் அதிகாரத்தில் காண முடியும்.
வேதபாரகர்களும்,  பரிசேயர்களும் மிகவும் உயர்வாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கும் மேலானவர் இயேசு கிறிஸ்து என்பதை இந்த வேதப் பகுதியில் இயேசு கிறிஸ்து அற்புதமாக விளக்கி காண்பித்திருக்கிறார்.   
சாலொமோனிலும் பெரியவர்
“தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்” (மத்தேயு 12:42) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
இந்த வசனத்தில் “சாலொமோனை குறிப்பிட்டு, இயேசு கிறிஸ்து ஒப்பனை செய்து பேசுவதிலிருந்து  ஆழமான செய்தி என்ன என்பதை வேதாகமத்தின் பிண்ணனியத்துடன் ஆராய்ந்து பார்க்கும் போது, இயேசு கிறிஸ்து சொல்லும்  செய்தியை சுவைக்க முடியும்.
இயேசு கிறிஸ்து குறிப்பிடும் “தென்தேசத்து ராஜஸ்திரீ” யை க்குறித்து 1 ராஜாக்கள் 10 ம் அதிகாரத்திலும், அதே சம்பவத்தை 2 நாளாகமம் 9 ம் அதிகாரத்திலும் வாசிக்க முடியும்.
“சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்” (2நாளா 9:1)  என்று வேதம் கூறுகிறது.
“சேபாவின் ராஜஸ்திரீ” யைக் குறித்தே இயேசு கிறிஸ்து “தென் தேசத்து ராஜஸ்திரீ” என்று குறிப்பிடுகிறார். சாலொமோனின் நாட்களில் வாழ்ந்து வந்த இந்த பெண் சாலொமோனின் ஞானத்தைக்குறித்தும்,, அவனுடைய கீர்த்திகளைக் குறித்தும், அறிந்து தனது தேசத்திலிருந்து, எருசலேமுக்கு வருகிறாள்.

"ஜீவ அப்பம்'' (பிப்ரவரி 2017) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக,  விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.

எல்லோரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( பிப்ரவரி  2017) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

தண்ணீர் இல்லா மேகங்கள்




 “துர் உபதேசம்” மிக கொடிய ஆவிக்குரிய வியாதி. மெல்ல மெல்ல விசுவாச வாழ்வை அழிக்க முயற்சிக்கும் உயிர்கொல்லி, இதில் அறிந்து சிக்கியவர்களை விட அறியாமல் சிக்கியவர்களே அதிகம்.
கிறிஸ்துவை விட்டு, பிரித்து, ஒழுக்க நெறிகளை விட்டு விலக்கி, பரிசுத்தவாழ்வுக்கு தகுதியில்லாமல் மாற்றி, தேவனுடைய ஐக்கியத்தை விட்டு முழுவதுமாக  பிரிப்பதுவே, துர் உபதேசத்தின் நோக்கம்.
எனவே ஆவிக்குரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும், தெரிந்து கொள்ள வேண்டியதும் மிக மிக அவசியம். இதன் தன்மை என்ன? இதன் ஊடுருவல் எப்படிப்பட்டது? என்பதை  வேத வசனங்களின் மூலமாக அறிந்தால் இதன் தாக்குதலில் இருந்து  தற்காத்துக் கொள்ளலாம்.