"ஜீவ அப்பம்'' (மார்ச் 2016) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
நண்பனா? எதிரியா?
பாவத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும்
இல்லை. பாவம் செய்கிறவனாக இருந்தால்
அவன் கிறிஸ்தவன் இல்லை. கிறிஸ்தவனாக இருந்தால்
அவன் பாவம் செய்வது இல்லை.
பாவத்தை ஜெயிக்க வேண்டும்
என்ற எண்ணம் உள்ளவர்கள் முதலாவது
பாவத்தை எதிரியாகப் பார்க்க வேண்டும், பாவத்திலிருந்து
விடுபட வேண்டும் என்பவர்கள் பாவத்தை வெறுக்க வேண்டும்.
பாவத்திற்கு நண்பனாக இருந்து கொண்டு,
பாவத்தை ஜெயிக்க வேண்டும் என்ற
பேச்சுக்கள் எல்லாம் வெறும் மாய்மாலங்களாகவே
இருக்கும்.
பாவத்தை வெறுக்காமல் பரிசுத்த
வாழ்வை விரும்புவது எவ்விதம் சாத்தியமாகும். பரிசுத்த வாழ்வை விரும்புகிறவர்கள் பாவத்தை
வெறுக்க வேண்டும். பாவத்துடன் உள்ள தொடர்பை துண்டிக்க
வேண்டும்.
இயேசு கிறிஸ்து பாவத்தின்
அடிமைத்தனத்தில் இருக்கும் மனிதனை விடுவித்து, பரிசுத்தமாக்குகிறார்.
அனுதினமும் பாவத்தை ஜெயிக்க பெலன்
தருகிறார்.
உன் எல்லையில் சத்துரு இல்லை
தேவனுடைய வாக்குத்தத்த வசனத்தை தியானித்து,
தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.
“யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம்
உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர்
உன்முன் பணிவார்கள்’’ (ஆதி 49:8)
நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்காத
தேவன், சத்துருவை ஜெயிக்கவும், நமக்கு விரோதமாக எழும்பும் சத்துருவை முறியடிக்கும்
பெலத்தையும் கொடுப்பேன் என்று வாக்குத்தத்தமாக இந்த வார்த்தைகளை இந்த மாதத்தில் நமக்கு
கொடுக்கிறார்.
நமக்கு எதிரிடையாக செயல்படும் சத்துரு, நம்மை
பெலவீனப்படுத்தும்படியாகவும், நமது நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் திருடும் படியாகவும்
செயல்பட நினைக்கிறான், அது மட்டும் அல்ல, தேவ சமூகத்தில் இருந்து நம்மை பிரிக்கும்
படியாகவும், தேவனோடு உள்ள ஐக்கியத்தை உடைக்கும் படியாகவும் தந்திரமாக செயல்படப் பார்க்கிறான்.
"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2015) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத ( செப்டம்பர் 2015) ஜீவ
அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
உனக்குள் இருக்கும் பலம்
தங்களுக்கு எதிரான
போராட்டங்களையே, சிலர் தோல்வி என்று
நினைத்துக்கொள்கின்றனர். ஆகையால் போராட்டத்தைப் பார்த்தும்,
போராட்டத்திற்கு காரணமாக இருக்கும் எதிரியை
பார்த்தும் பயந்து விடுகின்றனர்.
ஆகையால்தான் எதிரி கொண்டு வரும்
போராட்டத்தை நேருக்கு நேர் நின்று ஜெயிக்க
முடியாதபடி திணருகின்றனர். நமக்கு எதிரான பிரச்சனைகள்,
போராட்டங்கள் வரும் போது கண்ணை
மூடிக்கொண்டால் பிரச்சனை நீங்கி விடாது.
எதிரியை நேருக்கு நேர்
நின்று, எதிர்த்து, பிரச்சனைகளை தூள் தூளாக்க வேண்டும்.
அதை விட எதிரியின் தந்திரங்களை
சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
சத்தியமுள்ள, சத்தான சந்ததியே.......
கிறிஸ்துவுக்குள் பிரியமான என் அன்பு ஜீவ
அப்பம் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் இயேசு
கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் வாழ்த்துக்கள்.
நமது ஜீவ அப்பம்
மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த
மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுடைய மேலான கிருபையும். இரக்கமுமே,
நமது மாத இதழ் வருவதற்கு
மிக முக்கிய காரணம்.
பல நெருக்கடிகள் மத்தியில்தான்
உங்கள் கரங்களில் இந்த புத்தகமானது தவழ்ந்து
கொண்டிருக்கிறது. அத்தனை நெருக்கங்களையும் தாண்டி
இந்த புத்தகத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு காரணம், எதாகிலும் ஒருவார்த்தை
உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குள்ளான மறுரூபத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதற்காகத்தான்.
நமது சிந்தனை, எண்ணங்கள்
கிறிஸ்துவைப்போல் மாற்றத்தை பெற்றுவிட வேண்டும். இதுதான் நமது வாழ்க்கையில்
இருக்கும் பொல்லாத அரண்களை நிர்மூலமாக்கும்.
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடவே
இந்த மாதத்திற்கான ஆசீர்வாதமான
வசனத்தை தியானிப்போம். “இந்த நாள் நம்முடைய
ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள்
மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்’’ (நெகேமியா 8:10).
சந்தோஷமும், மகிழ்ச்சியும் தேவனால் கொடுக்கப்படுவதாகும், மகிழ்ச்சியை விரும்பாதவர்
இந்த பூமியில் யார் இருக்க முடியும்.மனிதர் மகிழ்ச்சியை விரும்புகிறார்கள்.
ஆனால் எதை மனிதரின்
இருதயம் மகிழ்ச்சி என்று நினைக்கிறது. எந்த
மகிழ்ச்சி கிடைக்காமல் மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது எந்த மகிழ்ச்சியைத்
தேடி மனிதர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ?
உலக பொருள்களின் வழியாகவும்,
உலக இன்பங்களின் வழியாகவும், மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் மனிதர்கள் தேடுவதால்தான் அதை முழுமையாக பெற்றுக்கொள்ள
முடியாமல், கலக்கம், கவலை, பயம், வேதனை
என்று வேண்டாத யாவற்றையும், விரும்பாமல்
எடுத்துக்கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள்.
நீயே அந்த மனிதன்
தவறுகள் ஒரு மனிதனுடைய வாழ்வில் ஏற்படுத்தும்
பாதிப்பைவிட, அந்த தவறுகளை இன்னொருவர் மீது திணிக்க முற்படுவதே மனித வாழ்வில் நீங்காத
பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
தன்னுடைய தவறுகளுக்கு இன்னொருவரே காரணமாக
இருக்கிறார் என்று மற்றவரை சுட்டி காட்ட காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை மனிதனுடைய
தவறுகள் ஒருபோதும் சரி செய்யப்படுவதில்லை.
தப்பிதங்களுக்கு சூழ்நிலைகள்தான் காரணம்
என்று சூழ்நிலைகளை காரணம் காட்டி தப்பித்து விடுவது, தற்காலிகமான விடுதலையே. அப்படிப்பட்ட
மனிதன் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக்கொள்கிறானே தவிர, தப்பிதங்களில் இருந்து
தப்பித்துக்கொள்வதில்லை.
மனிதனின் தொடர் தோல்விக்கு அடிப்படையாக இருப்பது,
தனது தவறை நேர்மையாக ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். ஆதி மனிதர்களாகிய ஆதாம் ஏவாளில் இருந்து
வந்த இந்த நிலை மனிதர்களிடம் செயல்படுவது விசித்திரம் அல்ல, அது ஜென்ம சுபாவம்.
பொய் சொல்வதற்கும், ஒரு விஷயத்தை மாற்றி
சொல்வதற்கும், திரித்து பேசுவதற்கும், மற்றவர்களை குற்றப்படுத்துவதற்கும் செலவிடப்படுகிற
நேரத்தையும், அதற்காக எடுக்கும் பயிற்சியையும் நிறுத்தி விட்டு, தனக்குள் இருக்கும்
வேண்டாதவைகளை விட்டு விட நேர்மையாக தேவனிடத்தில் அறிக்கையிட்டு, தன்னுடைய தப்பிதங்களுக்கு
மனஸ்தாபப்பட்டு தன்னைத்தானே அனுதினமும் நியாயம் தீர்த்து நடக்கும் போது வாழ்க்கை கிறிஸ்துவைப்போல
வெற்றியுடன் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.
எல்லாம் உனக்காக......
தேவனுடைய வார்த்தைகளை தியானித்து வாசிக்கும்
போது நமக்குள் உண்டாகும் பரவசத்தை வார்த்தையால் சொல்ல இயலாது, காரணம் தேவனுடைய வார்த்தையின்
வல்லமை நமக்குள்ளாக சென்று நம்மை உயிர்ப்பிக்கிறது.
ஜீவ அப்பம் வாசக குடும்பத்திற்கு இந்த மாத தேவனுடைய
வாக்குத்தத்தமான வார்த்தை “நீ எப்போதும்
என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது’’ (லூக்கா 15:31).
லூக்கா 15 ம் அதிகாரத்தில் 11ம் வசனத்தில் இருந்து
32 ம் வசனம் வரை உள்ள வேத பகுதியில் இரண்டு விதமான நபர்களைக் குறித்து இயேசுவானவர்
சொல்வதைப் பார்க்கலாம்.
அநேகமாக இந்த பகுதியில் இளைய மகனைக்குறித்துதான்
நாம் அதிகமாக தியானித்து இருக்கிறோம். ஆனால் உண்மையாக இந்த பகுதி மூத்த குமாரனை மையமாக
வைத்தே துவங்குகிறது.
மூத்த குமாரன், தனது தந்தை இளைய மகனை கவனிப்பது
போல் தன்னை கவனிக்க வில்லையே என்று வருந்துகிறான். ஆனால் தந்தையின் பதிலோ, தனது மூத்த
மகனையும் தான் எவ்விதம் நேசிக்கிறேன், எந்த
அளவுக்கு அதிகாரம் தந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள அறிவுறுத்துவதாக இருக்கிறது.



















