தேவ நியமனமும்! சீரழியும் சமுதாயமும்!!
இன்றைய நவீன சமுதாயத்தின் புரட்சிகளை பார்க்கும் பொழுது, மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது? இக்காலத்தில் பாலின உறவுகளை பொறுத்தமட்டில் எல்லா நல்லொழுக்க வரம்புகளையும் அது நீக்க விரும்புகிறது.
வேறுயாரும் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எந்த விதமான பாலின நடக்கைகளும் ‘சரிதான்’ என்று சில நவீன கால முட்டாள்கள் சொல்லுகின்றனர்.
இப்படி சமுதாய சீர்கேடுகளின் போக்கு,“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத் 24:37) என்று இயேசு கிறிஸ்து கூறியது போல், நடந்து வருகின்றன.
சிலுவையில்லா இயேசு !!
சிலுவையில்லா இயேசு எல்லோருக்கும் பிடிக்கும் ,சிலுவையோடு, பாவியை மீட்க வந்த இயேசுவை ஏற்பது என்பது எல்லோருக்கும் சற்று கடினமான ஒன்றுதான்.
பரிசுத்த வேதாகமம் கூருகிறது, "பாவிகளைமீட்க கிறிஸ்து இயேசு வந்தார்''
இயேசு கிறிஸ்து ஞான குருவாக இப்பூமிக்கு வரவில்லை, உலக இரட்சகராக இப்பூமிக்கு வந்தார்.
ஒரு கதை ஒன்று இப்படியாக உள்ளது "நான்கு குருடர்கள் யானையை தடவி பார்த்தார்களாம், ஒருவன் வாலை பிடித்துக்கொண்டு சொன்னானாம் யானை கயிறு போல் உள்ளது என்று, மற்றொருவன் காதை பிடித்துக்கொண்டு முறம் என்று சொன்னானாம் இப்படி நான்கு பேரும் ஒவ்வொன்றை பிடித்துக்கொண்டு ஒவ்வொருவிதமாக கூறினார்களாம், ஒருவனுக்கும் யானையின் முழு உருவம் தெரியவில்லை.
உயர்ந்த நிலைக்கு செல்லவே!
வாழ்க்கையென்கிற ஓட்டத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ அநேகர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
தான் போக வேண்டிய இடத்தை, சரியாக அறியாமல் பயணம் செல்பவன் வழியெல்லாம் குழப்பத்தோடு செல்வான். புறப்படும்பொழுது, போகவேண்டிய இடத்தையும், போய் என்ன செய்ய வேண்டும் என்பதையும், தீர்மானித்து தன் பயணத்தை ஆரம்பிக்கிறவன் நிச்சயத்தோடு ஆரம்பிக்கிறான். மேலும், தீர்மானிக்கப்பட்டதில் உறுதியாக இருந்து, திறம்பட செயல்படுகிறவன், சிறந்த ஒரு லட்சியவாதியாக நின்று, சாதனைக்கு பங்குள்ளவனாக இருக்கிறான். மனிதர்களாகிய நமக்கு, வாழ்க்கையின் நிச்சயம், பயணத்தின் லட்சியம் தெரிந்திருக்கும்பொழுது, உண்மையாகவே நமது வாழ்வு சிறப்பான வாழ்வாக இருக்கும்.
தடுமாற்றத்தின் காரணம்
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் பின் வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது (எபி 10:38) என்றும் மேலும் ஆபகூக் 2:4, ரோமர் 1:17, கலா 3:11 வேதாகமத்தில் அதிக இடங்களில் விசுவாசத்தால் வாழ்வோம் என்று கூறும் வேதம், விசுவாசத்தில் போராடும்படியான அழைப்பையே (1திமோ6:12, யூதா 3) ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கிறது. மேலும், விசுவாசத்தின் மேன்மையை உணர்த்தி, மறுபடியும் மறுபடியும் தேவன் அழைக்கிற அழைப்பும் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் படியாகவே உள்ளது.
அரணை காத்துக்கொள்
வாழ்க்கை பயணத்தில் சமாதானமும், மகிழ்ச்சியையும் மனிதர் யாவரும் விரும்புவர். ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்று என்பது போல் இவைகளை கெடுக்கும் படியாகவே ஒரு மனிதனுக்கு முன்னும், குடும்பத்துக்கு முன்னும் எதிரியான பிசாசு சிதறடிக்கிறவனாக வருகிறான். பாதுகாப்பு வட்டத்துக்குள் வரும்படி மனிதனுக்கு வேதம் அழைப்பு விடுக்கிறது.
நன்மை எங்கிருந்து வரும்?
மனிதரின் சிந்தையில் எப்பொழுதுமே ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் "நன்மை எங்கிருந்து வரும்" நமக்கு யார் நன்மை செய்வார், எவ்விதத்திலேயாகிலும் நன்மை கிடைக்காதா, என்ற எண்ணம் தான். ஆனால் உண்மையாக நடப்பது என்ன? பெரும்பாலான நபர்களை பார்த்து மனம் நொந்து போவது தான் வாழ்க்கையில் மிச்சமாக இருக்கும். ஆனால் உண்மையாகவே மனிதர் களின் வாழ்வில் நன்மை வருமென்றால் அது ஒருவரிடமிருந்து தான் வரும்.














